உனக்கும் இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட முடிவுதான்... மன்னரின் முன்னாள் காதலிக்கு மிரட்டல்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
1221Shares

உனக்கும் இளவரசி டயானாவுக்கு ஏற்பட்ட முடிவுதான் என தனக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக லண்டனில் வாழ்ந்துவரும் பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஸ்பெயின் மன்னரான Juan Carlosஉடன் முறை தவறிய உறவு வைத்திருந்ததாக அறியப்பட்டவர் Corinna Larsen. அந்த உறவு 2012ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்தது.

அந்த காலகட்டத்தில், மன்னர் Carlos, Larsenஉடைய வங்கிக்கணக்கில் 65 மில்லியன் யூரோக்கள் பரிசாக செலுத்தியதாக வெளியான தகவல் உலகின் கவனம் ஈர்த்தது. மன்னருடன் தொடர்பிலிருந்த காலகட்டத்தில், Larsenக்கு மன்னருடைய மற்றும் ராஜ குடும்பத்தின் நிதி மற்றும் வர்த்தகம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

ஆனால், இருவரும் பிரிந்த நிலையில், அந்த ஆவணங்களை திருப்பிக் கொடுக்குமாறு மன்னரின் உத்தரவின்பேரில் ஸ்பெயின் உளவுத்துறையின் முன்னாள் தலைவரான ஜெனரல் Felix Sanz Roldan என்பவர் தன்னை மிரட்டியதாக நேற்று நீதிமன்றம் முன்பு சாட்சியமளித்தார் Larsen.

பல கட்டுப்பாடுகளை விதித்த ஜெனரல், தான் அவற்றின்படி செய்யவில்லையானால், தன்னுடைய மற்றும் தன் பிள்ளைகளுடைய பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரமுடியாது என மிரட்டியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார் Larsen.

ஒரு நாள் Larsen வீடு திரும்பும்போது, அவரது வீட்டிற்குள் டயானா பாரீஸ் சுரங்கப்பாதையில் கொல்லப்பட்டது குறித்த புத்தகம் ஒன்றை யாரோ வைத்துச் சென்றிருந்ததாகவும், அன்று இரவு தன்னை தொலைபேசியில் அழைத்த யாரோ ஒருவர், ஸ்பெயினுக்கும் அவர் தங்கியிருந்த இடத்துக்கும் நடுவில் கூட பல சுரங்கப்பாதைகள் இருப்பதாக மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.

இந்த விடயங்கள், எப்படி டயானா சுரங்கப்பாதையில் கொல்லப்பட்டாரோ அதேபோல் தானும் கொல்லப்படுவேன் என தன்னை மிரட்டுவதாகத்தான் தனக்கு தோன்றியதாக தெரிவிக்கிறார் Larsen.

அத்துடன் 2012ஆம் ஆண்டு மே மாதம், லண்டனிலுள்ள Connaught ஹொட்டலில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின்போது, ஜெனரல் தன்னை நேரடியாகவே மிரட்டியதாகவும், அவரது வார்த்தைகள் தன்னை திகிலடையச் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் Larsen.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஜெனரல் Felix Sanz Roldan மறுத்துள்ளார். வழக்கு தொடர்கிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்