ஊரடங்கை விலக்கிக்கொள்வது எப்போது? கட்டுப்பாடுகள் தொடருமா? பிரித்தானிய அமைச்சர் பதில்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
274Shares

பிரித்தானியாவில் ஊரடங்கை விலக்கிக்கொண்டாலும், அடுக்கு முறை கட்டுப்பாடுகள் அமுலுக்கு வரும் என வெளிவிவகார அமைசார் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவில் எதிர்வரும் மார்ச் மாதம் ஊரடங்கை விலக்கிக்கொள்ள அரசு திட்டமிட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் டொமினிக் ராப் இன்று தெரிவித்துள்ளார்.

அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை ஒரே நாளில் மொத்தமாக விலக்கிக்கொள்ள முடியாது என விளக்கமளித்த அமைச்சர் டொமினிக் ராப்,

ஒவ்வொரு பிராந்தியங்களின் நிலைமைக்கு ஏற்ப கட்டம் கட்டமாக கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்றார்.

மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கை நீக்குவதற்கு மூன்று அம்ச திட்டத்திற்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக கூறும் அமைச்சர் டொமினிக் ராப்,

இறப்பு விகிதம் கண்டிப்பாக சரிவடைய வேண்டும், மருத்துவமனைகளை நாடுவோரின் எண்ணிக்கை குறைய வேண்டும்,

மட்டுமின்றி குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் 50 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.

ஊரடங்கை விலக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர்கள் கூடி முக்கிய முடிவை எடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு அழுத்தம் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

தெளிவான திட்டம் ஒன்றை ஊரடங்கு விலக்குவது தொடர்பில் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்