பிரித்தானியாவில் பரவும் இன்னொரு உருமாறிய தொற்று... பலருக்கு பாதிப்பு உறுதி

Report Print Arbin Arbin in பிரித்தானியா
0Shares

பிரித்தானியாவில் இன்னொரு உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுவரை 16 பேர்களுக்கு புதிய உருமாற்றம் கண்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய உருமாற்றம் கண்ட தொற்று தொடர்பில் விசாரணை கட்டத்திலேயே இருப்பதால், விரிவான சோதனைக்கு தற்போது உத்தரவிட முடியாது என தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் லிவர்பூலில் காணப்பட்டதைப் போன்ற கூறுகள் தற்போது புதிதாக கண்டறியப்பட்டுள்ள தொற்றிலும் காணப்படுவதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தென்னாபிரிக்கா மற்றும் பிரேசிலில் உருமாற்றம் கண்ட வீரியம் மிகுந்த தொற்றின் கூறுகள் இதில் காணப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பிப்ரவரி 15ம் திகதி முதல் முறையாக அடையாளம் காணப்பட்டதாகவும், பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர்களும், அவர்களுடன் தொடர்புடைய அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தலுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில் இதுவரை நான்கு உருமாற்றம் கண்ட கொரோனா தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நான்கு தொற்றுகள் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

லிவர்பூல் நகர பிராந்தியம், வாரிங்டன், பிரஸ்டன் மற்றும் மேற்கு லங்காஷயர் ஆகிய இடங்களில் 58 பேர்களுக்கு இந்த புதிய தொற்றின் பாதிப்பு தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்