சிறுவனின் கண்ணில் பந்து போன்ற கட்டி: அறுவை சிகிச்சையை வீடியோ எடுத்த மருத்துவர்

Report Print Deepthi Deepthi in அமெரிக்கா
சிறுவனின் கண்ணில் பந்து போன்ற கட்டி: அறுவை சிகிச்சையை வீடியோ எடுத்த மருத்துவர்

மத்திய அமெரிக்காவில் சிறுவன் ஒருவனுக்கு கண்ணில் பந்து போன்ற அளவில் ஏற்பட்டுள்ள கட்டியை, அறுவை சிகிச்சை மூலம் நீக்கிய காட்சியை மருத்துவர் வீடியோ எடுத்துள்ளார்.

மத்திய அமெரிக்க நாடான El Salvador- இல் வசித்து வந்த சிறுவனின் இடது கண்ணில், நீர்க்கட்டி ஏற்பட்டுள்ளது, இந்த கட்டி படிப்படியாக வளர்ந்து பந்துபோன்ற அளவில் பெரிதாகிவிட்டதால், சிறுவனால் எதையும் சரியாக பார்க்கமுடியவில்லை.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, , Dr Alberto Cota அறுவை சிகிச்சை மூலம் அக்கட்டியை அகற்றியுள்ளார், இந்த சிகிச்சையானது வீடியோவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் scalpel(கத்தி) கொண்டு சிறுவனின் கட்டியில், லேலாச கிழித்துவிடுகிறார், அடுத்த நிமிடமே மஞ்சள் நிற சீழ் வெளியேறுகிறது, அதன்பின்னர் அதனை துடைத்த பின்னர், சிறுவனுக்கு வலி பொறுக்கமுடியவில்லை, கட்டி நீக்கப்பட்ட இடத்திலிருந்து ரத்தமும், சீழும் கலந்து வெளிவருகிறது.

இறுதியில், சிறுவனின் கண்ணில் இருந்து கட்டி நீக்கப்பட்டுள்ளது, இந்த நீர்கட்டியானது உலகளவில் மனிதர்களுக்கு பொதுவாக ஏற்படும் ஒருவகை கட்டியாகும், இந்த கட்டியால் 30 முதல் வயதிக்குட்பட்டவர்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.

கண் நாளங்களில் அடைப்பு ஏற்படும் போது இதுபோன்ற கட்டி உருவாகிறது என மருத்துவர் தெரிவித்துள்ளார், தற்போது ஓய்வில் இருக்கும் அச்சிறுவன், சுடுதண்ணீர் வைத்து கட்டி இருந்த இடங்களை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments