நீங்கள் அப்பாவாக இருப்பதற்கு தகுதி இல்லாதவர்.. உலகை விட்டுச் செல்கிறோம் : மனைவியின் கண்ணீர் பேஸ்புக் பதிவு

Report Print Santhan in அமெரிக்கா
311Shares

அமெரிக்காவில் பெண் ஒருவர் உங்கள் மகனை நீங்கள் இனி பார்க்க முடியாது என்று தன் கணவருக்கு பேஸ்புக் மூலம் கூறிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்தில் Shrewsbury Township பகுதியைச் சேர்ந்தவர் Sheri Shermeyer. இவருக்கு John Shermeyer என்ற ஒரு வயது குழந்தை இருந்துள்ளது.

இவர் Boxing Day என்று கூறப்படும் அன்றைய நாளில், தன் கணவருக்கு இனி நீங்கள் உங்கள் மகனை பார்க்க முடியாது. எல்லாம் முடிந்து விட்டது, நாங்கள் இந்த உலகை விட்டுச் செல்கிறோம் என்று வாயில் துப்பாக்கியை வைத்தபடி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தன்னுடைய கணவருக்கு செய்தி அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக Pennsylvania பொலிசாருக்கு மூன்று மணி நேரத்திற்கு பின்னர் தகவல் தெரியவந்துள்ளது. உடனடியாக பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்ற போது தாய் மற்றும் குழந்தை சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்து கிடந்துள்ளனர்.

இது தொடர்பாக பொலிசார் அவருடைய பேஸ்புக் பக்கத்தை ஆராய்ந்து பார்த்த போது அதில், குழந்தைக்கு ஒரு பெற்றோர் தான் இருக்க முடியும், அது எப்படி குழந்தைக்கு இரண்டும் பெற்றோர் இருக்க முடியும் என்று கூறியுள்ளார்.

Shermeyer கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் Tracy Alan Shermeyer என்பவரை திருமணம் செய்துள்ளார். அதன் பின்னர் இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது. அதைத் தொடர்ந்து அவர் குழந்தையை காண வரவே இல்லை என்பது போல் கூறப்படுகிறது.

இவனுக்கு நீங்கள் அப்பாவாக இருப்பதற்கு தகுதி அற்றவர், நீங்கள் ஒரு மோசமான மனிதன் என கூறியுள்ளார்.

மேலும் தன்னுடைய வார்த்தையின் கடைசி வார்த்தையாக தான் உன்னிடம் ஒன்று கூற மறந்து விட்டேன், தன் மகன் ஜானின் உடைய ஆயுள் காப்பீட்டுத்திட்டம் இருக்கிறது.

அதில் வரும் பணத்தில் தான் வாங்கியிருக்கும் கடனை அடைத்து விடு, அதன் பின் நீ ஒரு துயரமான வாழ்க்கையை மேற்கொள் என்று வருத்ததுடன் அதில் கூறியுள்ளார். Shermeyerன் கணவர் மிகப் பெரிய குடிகாரராக இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments