பனிச்சரிவில் சிக்கி கொல்லப்பட்ட காதலி: காப்பாற்ற முடியாததால் காதலன் எடுத்த முடிவு

Report Print Arbin Arbin in அமெரிக்கா
425Shares
425Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் மொன்டானா மாகாணத்தில் பனிச்சரிவில் சிக்கிய காதலியை காப்பாற்ற முடியாத சோகத்தில் மனமுடைந்த காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தலைச்சிறந்த மலையேறும் வீரர்களில் ஒருவர் அமெரிக்கரான Hayden Kennedy. இவர் மொன்டானா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதியில் ஏறும்போது குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஹேடன் கென்னடி மற்றும் அவரது காதலி ஆகிய இருவரும் மலையேறும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென்று பனிச்சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஹேடன் மற்றும் அவரது காதலி இருவரும் ஆளுயர பனியில் புதைந்து போயுள்ளனர். இதனிடையே சுதாரித்துக் கொண்டு மீண்ட ஹேடன், தமது காதலிடை தேடியுள்ளார்.

ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போனது. சுமார் 20 மணி நேரம் தேடியும் ஹேடனால் அவரது காதலியின் உடலை மீட்க முடியவில்லை.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான ஹேடன், தனது கண்முன்னே விபத்து நடந்தும் தன்னால் காப்பாற்ற முடியவில்லையே என்ற சோகத்தால் அடுத்த நாள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது குழுவினர் சமூக வலைதள பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாகவே மொன்டானா பகுதியில் முகாமிட்டு ஹேடன் மற்றும் அவரது குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டுவந்துள்ளனர்.

ஹேடன் எடுத்த இந்த முடிவு தங்களது குழுவினருக்கு பேரிழப்பு என அவரது ஆதரவாளர்கள் குழு கவலை தெரிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்