அமெரிக்காவின் விர்ஜீனியா மற்றும் நியூ ஜெர்சி மாகாணங்களில் நடைபெற்ற தேர்தலில் டிரம்பின் குடியரசு கட்சி தோல்வியை சந்தித்துள்ளது.
விர்ஜீனியாவில் நடைபெற்ற தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் Gillespie -ஐ தோற்கடித்து புதிய ஆளுநராக ஜனநாயக கட்சியின் Northam வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோன்று நியூஜெர்சியின் புதிய ஆளுநராக ஜனநாயக கட்சியின் வேட்பாளர் Murphy தெரிவாகியுள்ளார்.
அதுபோன்று நியூயோர்க நகர தேர்தலிலும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் Bill de Blasio வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் நடந்த மாகாணத்தேர்தலில் டிரம்பின் கட்சி தோல்வியுற்றால் அக்கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.
மேலும் ஜனநாயக கட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்துள்ளது.
விர்ஜீனியா
Northam - ஜனநாயக கட்சி - 1,405,256 வாக்குகள் பெற்றுள்ளார்.
Gillespie - குடியரசு கட்சி - 1,172,622 வாக்குகள் பெற்றுள்ளார்
நியூயோர்க்
de blasio - ஜனநாயக கட்சி - 726,361 வாக்குகள் பெற்றுள்ளார்.
Malliotakis - குடியரசு கட்சி - 303,741 வாக்குகள் பெற்றுள்ளார்
நியூ ஜெர்ஸி
Murphy - ஜனநாயக கட்சி - 1,124,168 வாக்குகள் பெற்றுள்ளார்.
Guadagno - குடியரசு கட்சி - 858,624 வாக்குகள் பெற்றுள்ளார்.