விமானத்தின் அவசர வாசல் வழியாக குதித்த பயணி: சமயோசிதமாக செயல்பட்ட பணியாளர்கள்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தின் அவசர வாசல் வழியாக விமான பயணி ஒருவர் குதிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் இருந்து 400 பயணிகளுடன் நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி விமான நிலையத்தில் தரையிறங்கியது எல் அல் விமான சேவை நிறுவனத்தின் விமானம் ஒன்று.

உள்ளூர் நேரப்படி பகல் 9 மணியளவில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. தரையிறங்கிய குறித்த விமானத்தில் இருந்து ஆண் பயணி ஒருவர் திடீரென்று அவசர வாசல் வழியாக குதிக்க முயன்றுள்ளார்.

சமயோசிதமாக செயல்பட்ட இரண்டு விமான ஊழியர்கள் அந்த நபரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து அந்த நபரை உள்ளூர் பொலிசாரிடம் விமான நிலைய நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

கைதான நபர் அமெரிக்க குடிமகன் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட எல் அல் விமான சேவை நிறுவனம், பயணிகள் பயன்பாட்டிக்கு அனுமதி இல்லாத அவசர வாசல் ஒன்றை அமெரிக்க குடிமகன் ஒருவர் திறந்து குதிக்க முயன்றுள்ளார்.

குறித்த நபர் குதித்திருந்தால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும். ஆனால் சமயோசிதமாக செயல்பட்டு அந்த முயற்சியில் இருந்து அவரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

போயிங் 747 விமானங்களில் அவசர வாசலின் உயரமானது 5.2 மீற்றர் என கூறப்படுகிறது, அதாவது 17 அடி.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்