அவள் வலியால் துடித்திருப்பாள்! கொரோனா அறிகுறி தெரிந்த அடுத்தநாளே உயிரிழந்த இளம்பெண்... நடந்ததை விவரித்த அண்ணன்

Report Print Raju Raju in அமெரிக்கா
1977Shares

அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொரோனா அறிகுறியால் அவதிப்பட்ட அடுத்த நாளே உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்தவர் ஜெசிகா கோர்டெஸ்.

கடந்த மார்ச் 23-ம் திகதி உடல் வலி இருப்பதாக ஜெசிகா தன் சகோதரரிடம் தெரிவித்துள்ளார். சகோதரர் சென்று பார்ப்பதற்குள் ஜெசிகா மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

ஜெசிகா மரணம் குறித்து தற்போது பேசிய அவர் சகோதரர் சீசர் கோர்டெஸ், கடந்த 23-ம் திகதிக்கு முன்னர் வரை என் சகோதரி நல்ல உடல் ஆரோக்கியத்துடன்தான் இருந்தார்.

சிறிது உடல் வலி மற்றும் நடுக்கமாக இருப்பதாகக் கூறினார். அப்போதே எங்களுக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சம் இருந்தது. ஆனால் உடல் வலி ஏற்படுவதற்கும் வைரஸுக்கும் தொடர்பில்லை என நினைத்து அவருக்கு முதலுதவி மருந்து கொடுத்தேன். மறுநாள் ஜெசிகாவுக்கு உடல்நிலை மோசமாக இருப்பதாக எனக்கு போன் வந்தது.

நான் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்குச் சென்று பார்த்தபோது ஏற்கெனவே ஜெசிகா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரேநாளில் உடல்நிலை மோசமாகி அவர் உயிர் பிரியும் நிலை வந்தது எங்களுக்குப் பெரும் அதிர்ச்சியாக உள்ளது.

என் சகோதரி வலியில் துடித்திருப்பாள், அவள் உயிர் பிரியும் நேரத்தில்கூட ஆறுதல் சொல்ல அருகில் யாரும் இல்லை என கண்ணீருடன் கூறியுள்ளார்.

இதனிடையில் ஜெசிகா இறந்த பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவரை கொரோனா தாக்கியது உறுதிசெய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்