எலிகளில் பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து- ஆய்வில் வெற்றி

Report Print Fathima Fathima in அமெரிக்கா

புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து எலிகளில் பரிசோதிக்கப்படத்தில் நல்ல எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தியிருப்பதாக ஆய்வில் மகிழ்ச்சிகர முடிவுகள் வெளிவந்துள்ளன.

EBioMedicine என்ற மருத்துவ இதழில் குறித்த ஆய்வு தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் ஆண்ட்ரியா கம்பாட்டோ கூறுகையில்,

2003-ல் சார்ஸ், 2014-ல் மெர்ஸ் ஆகிய வைரஸ்களில் எங்களுக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. இவ்விரு வைரஸ்களும் கரோனா வைரஸுக்கு மிக நெருக்கமானவை.

இந்த வைரஸ்களை அழிப்பதில் ஒரு குறிப்பிட்ட வகைப் புரதத்துக்குப் பெரும் பங்கிருக்கிறது என்பதை ஏற்கெனவே நாங்கள் அறிந்திருக்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் PittCoVacc என பெயரிடப்பட்டுள்ள Vaccine-னை எலிகளுக்கு அளித்து பரிசோதித்ததில் நோய் எதிர்ப்பு ஆற்றலை இரு வாரங்களிலேயே மிக அதிக அளவில் அளித்துள்ளது.

எனினும் நோயாளிகளிடம் பரிசோதித்துப் பார்க்கக் குறைந்தபட்சம் ஓராண்டு தேவைப்படும்.

தற்போது மிகவும் இக்கட்டான நிலை இருப்பதால், அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இன்னமும் சற்று விரைவாக இந்த மருந்தைப் பொதுப் பயன்பாட்டுக் கொண்டுவர முடியும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்