அமெரிக்காவில் திருடன் பொலிஸ் விளையாட்டின்போது, நிஜத் துப்பாக்கியால் தனது தம்பியை சுட்டுக்கொன்றுள்ளான் சிறுவன் ஒருவன்.
பெனிசில்வேனியாவைச் சேர்ந்த Brayden Leroy Wright (13) என்னும் சிறுவன், தனது 9 வயது தம்பியுடன் திருடன் பொலிஸ் விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிறான்.
விளையாட்டின் நடுவே Brayden சொன்னதைக் கேட்காமல் அவனது தம்பி யூடியூப் வீடியோ பார்க்கச் சென்றுவிட்டானாம்.
கோபமடைந்த Brayden, தனது தந்தையின் துப்பாக்கியை எடுத்து தம்பியின் பின் மண்டையில் சுட்டிருக்கிறான்.
வீடியோ பார்த்துக்கொண்டிருந்த அந்த சிறுவன் இரத்த வெள்ளத்தில் சரிய, அவசர உதவியைஅ ழைத்துள்ளான் Brayden.
ஆனால், மருத்துவ உதவிக்குழுவினர் வந்து பார்க்கும்போது Braydenஇன் தம்பி உயிருடன் இல்லை.
Braydenஐக் கைது செய்துள்ள பொலிசார், அவனை ஒரு சிறுவனாக பாவிக்காமல், ஒரு வயது வந்த நபராக கருதி வழக்கு விசாரணைக்கு உட்படுத்த உள்ளனர்.
காரணம், அந்த துப்பாக்கி நிஜத்துப்பாக்கி என்பதும் அவனுக்குத் தெரியும். அத்துடன், அதில் குண்டு இருந்ததும் தனக்கு தெரியும் என்றும் Brayden கூறியுள்ளான்.
Braydenஇன் பெற்றோர் ஒரே நேரத்தில் இரண்டு பிள்ளைகளையும் பிரிந்துள்ள நிலையில், அவர்களது மூன்று பெண் குழந்தைகளுக்கும் மனோதத்துவ நிபுணர்கள் கவுன்சலிங் அளித்து வருகின்றனர்.