அடி வயிற்றில் வலியுடன் கண் விழித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி! அம்பலமான மருத்துவரின் உண்மை முகம்: திடுக்கிடும் தகவல்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவின் ஜார்ஜியாவிலுள்ள புலம்பெயர்தல் தொடர்பான சிறை ஒன்றில், மயக்கத்திலிருந்து விழித்த இளம்பெண் ஒருவர் அடிவயிற்றில் கடுமையான வலி இருப்பதை உணர்ந்துள்ளார்.

கைகளும் கால்களும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கட்டிலுடன் இணைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த அவர், மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார்.

மயக்கம் தெளிந்து அந்த 28 வயது பெண் கண்விழித்தபோது, அவரது சம்மதம் இன்றியே அவரது கருப்பையில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர் Dr. Mahendra Amin என்பவராவார்.

Dr. Mahendra மீது அதே மருத்துவமனையில் பணியாற்றும் Dawn Wooten என்ற செவிலியர் திடுக்கிடவைக்கும் புகார் ஒன்றைத் தெரிவித்திருந்தார்.

நேரடியாக Dr. Mahendraவின் பெயரைக் குறிப்பிடாமல்,குறிப்பிட்ட சிறையிலிருக்கும் பெண்களின் கருப்பைகளை அவர்களது சம்மதமின்றி மருத்துவர் ஒருவர் அகற்றுவதாக குற்றம் சாட்டியிருந்தார் அவர்.

அவர் இந்த உண்மையை வெளியிட்டதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண்கள் 19 பேர் தைரியமாக அந்த மருத்துவர் மீது புகாரளிக்க முன்வந்துள்ளனர். அந்த மருத்துவர்தான் Dr. Mahendra.

அவர் தேவையின்றி, மற்றும் சம்பந்தப்பட்ட பெண்களின் ஒப்புதலும் பெறாமல், அவர்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்வது, இனப்பெருக்க உறுப்புகளை அகற்றுவது ஆகிய செயல்களில் ஈடுபட்டுள்ளதாக அந்த பெண்கள் புகாரளித்துள்ளனர்.

ஆனால், Dr. Mahendraவின் சட்டத்தரணி, மருத்துவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

அந்த 19 பெண்களிடம் பெறப்பட்ட 3,200க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட புகார் அறிக்கை ஒன்று, நாடாளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்