பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எதிர்பாராத விதமாக தன்னை தானே சுட்டு கொண்டு உயிரிழந்த சிறுவன்! அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in அமெரிக்கா
186Shares

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது 3 வயது சிறுவன் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் மூன்று வயது சிறுவன் தனது குடும்பத்தினருடன் கடந்த சனிக்கிழமை பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட உறவினரிடம் இருந்த கைத்துப்பாக்கியை எடுத்த சிறுவன் அதை வைத்து விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி சுட்டத்தில் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்த சம்பம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள வடக்கு ஹூஸ்டன் நகர காவல்துறையினர் விசாரணை மெற்கொண்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் மக்கள் துப்பாக்கி வைத்திருக்க அந்நாடு அங்கீகரித்துள்ள நிலையில் ஆண்டுதோறும் இதுபோன்ற ஏராளமான துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்