ஜனாதிபதி டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுத்த ஐஎஸ்ஐஎஸ் சிறுவன்: வெளியான முழுத்தகவல்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்புக்கு கட்டாயத்தின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த ஐஎஸ் சிறுவன் சிரியாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளான்.

அமெரிக்க சிறுவனான மேத்யூ சிரியாவில் இருந்து காணொளி மூலம் ஜனாதிபதி டிரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கும் போது அவனுக்கு 10 வயது.

அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த அந்த காணொளியில், யூதர்களின் கைப்பாவை டிரம்ப் எனவும், அமெரிக்க மண்ணில் பேரழிவுக்கு தயாராக இருங்கள் எனவும் சிறுவன் மேத்யூ கூறியிருப்பான்.

2017-ல் வெளியிடப்பட்ட அந்த காணொளியில், டிரம்ப் அவர்களே உங்கள் தோல்வி உறுதி, எங்களுக்கான வெற்றி ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டது.

முன்னெடுக்கப்படும் இந்த போர் ரக்கா அல்லது மொசூல் நகரங்களில் முடிவடையாது என்றும், உங்கள் மண்ணில் நிறைவடையும் எனவும், அதனால் தயாராக இருங்கள் என மிரட்டல் விடுத்திருப்பான் சிறுவன் மேத்யூ.

ஆனால், சிறுவனின் வளர்ப்பு தந்தையின் கட்டாயத்தின் பேரிலேயே, காணொளியில் சிறுவன் மேத்யூ தோன்றியதாகவும், உயிருக்கு பயந்தே அது நடந்தது எனவும் சிறுவன் தரப்பில் தற்போது கூறப்படுகிறது.

மேத்யூவுக்கு 10 வயது இருக்கும் போது தாயார் சமந்தா மற்றும் வளர்ப்பு தந்தை மூசா அல் ஹசானி ஆகியோருடன் சிரியாவுக்கு சென்றனர்.

அதே ஆண்டு, 2017-ல் ஆளில்லா விமான தாக்குதலில் மூசா அல் ஹசானி கொல்லப்பட, ஐஎஸ் பிடியில் இருந்து தப்பிய அவரது மனைவி சமந்தா கைது செய்யப்பட்டு, தற்போது தீவிரவாத கும்பலுக்கு நிதி திரட்டியதன் பேரில் சிறை தண்டனைக்கு விதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, சிறுவன் மேத்யூ 2018-ல் அமெரிக்க ராணுவத்தால் மீட்கப்பட்டு, தற்போது அமெரிக்கா திரும்பியுள்ளான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்