படுக்கையறை முழுவதும் சிதறியிருந்த தலைமுடி! நள்ளிரவு 1 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி... பீதியில் குடும்பத்தார்

Report Print Raju Raju in அமெரிக்கா
1231Shares

அமெரிக்காவில் 11 வயது சிறுமி நள்ளிரவில் தனது படுக்கையறையில் இருந்து காணாமல் போனதோடு அவரின் தலைமுடி ஆங்காங்கே சிதறியிருந்தது அவர் குடும்பத்தாருக்கு சிறுமியின் நிலை குறித்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

காலிபோர்னியாவில் உள்ள லோமா லிண்டாவை சேர்ந்தவர் Tiva Lutu.

11 வயது சிறுமியான இவர் ஞாயிறு அன்று காணாமல் போயுள்ளார். நள்ளிரவு 1 மணிக்கு படுக்கையறையில் இருந்து வெளியில்ச் சென்றுள்ளார் Tiva Lutu.

அவரின் தலை முடியு நீளமாக இருக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரின் முடி படுக்கையறையில் வெட்டப்பட்டு ஆங்காங்கே சிதறி கிடந்துள்ளது.

மேலும் அங்கிருந்த கடிதத்தில், தன் விருப்பத்தின் பேரில் செல்கிறேன் என எழுதப்பட்டுள்ளது.

ஆனால் அந்த கடிதத்தை Tiva Lutu எழுதவில்லை எனவும், அவர் இவ்வாறு வீட்டை விட்டு ஓடுபவர் கிடையாது எனவும் குடும்பத்தார் கூறியுள்ளனர்.

சிறுமியின் நிலை என்ன என்பது அச்சத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் அவர் குறித்து தெரிந்தால் தகவல் கொடுக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்