மீண்டும் வைரலாகும் டெலிட் செய்யப்பட்ட ஓபாமா மகளின் டிக் டாக் வீடியோ

Report Print Basu in அமெரிக்கா
600Shares

நீக்கப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இளைய மகளின் டிக் டாக் வீடியோ தற்போது ட்விட்டரில் மீண்டும் வைரலாகியுள்ளது.

சமூக வலைதளங்களின் மூலம் அமெரிக்காவில் மிகவும் பிரபலமான இளைஞர்களில் மகள் சாஷா ஒபாமாவும் ஒருவர்.

19 வயதான சாஷா ஒபாமா தனது கல்லூரி நண்பர்கள் 6 பேருடன் வித்தியாசமாக நடனமாடும் வீடியோ டிக் டாக் செயலியில் வெளியாகி வைரலானது.

எனினும், அந்த வீடியோ டிக் டாக்கிலிருந்து நீக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது அதே டிக் டாக் வீடியோவை பலர் ட்விட்டரில் பகிர்ந்து வருவதால் வீடியோ வைரலாகியுள்ளது.

மிச்சிகன் பல்கலைக்கழக மாணவியான சாஷா ஒபாமா தனது கல்லூரி வாழ்க்கையை கொண்டாடி வருவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்