ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகள்... இனி தாமதிக்க முடியாது: ஜோ பைடன்

Report Print Arbin Arbin in அமெரிக்கா
618Shares

அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன், தனது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2 கோடியை நெருங்கியுள்ளது.

மேலும், சிகிச்சை பலனின்றி மரணமடைந்தோரின் எண்ணிக்கையிலும் (3.41 லட்சம்) அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டில் தடுப்பூசி போடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக ஜனவரி 20ம் திகதி பதவியேற்க உள்ள ஜோ பைடன்,

அமெரிக்கா எதிர்க்கொண்டுள்ள நெருக்கடிகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரஸ் மற்றும் பொருளாதாரம் முதல் காலநிலை மாற்றம், இன நீதி வரை நமது நாடு ஒரே நேரத்தில் நான்கு வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்கிறது.

ஜனவரி மாதத்தில், வீணடிக்க நேரம் இருக்காது. அதனால்தான் நானும் எனது அணியும் முதல் நாளில் நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறோம் என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்