இந்திய வம்சாவளி பெண்ணுக்கு முக்கிய பதவி கொடுப்பதாக கூறிய ஜோ பைடன் முடிவில் மாற்றம்! வாபஸ் பெறுவதாக அறிவிப்பு

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares

இந்திய வம்சாவளி பெண்ணை முக்கிய நிர்வாகத்தில் அமர்த்துவாக ஜோ பைடன் அறிவித்திருந்த நிலையில் தற்போது நியமனத்தை வாபஸ் பெற்றுள்ளார்.

வெள்ளை மாளிகையின் பட்ஜெட் மற்றும் அலுவலக மேலாண்மை குழுவின் இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நீரா டாண்டன் என்பவரை நியமிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார்.

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் நீரா டாண்டனுக்கு எதிராக திரண்டனர். ஆளும் ஜனநாயக கட்சியை சேர்ந்த செனட் சபை எம்.பி. ஜோ மான்சின், செனட் சபையில் நீரா டாண்டன் நியமனத்தை எதிர்த்து வாக்களிக்க போவதாக தெரிவித்தார்.

இதே போல் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சூசன் கொலின்ஸ், மிட் ரூம்னி, ராப் போர்ட்மேன் ஆகிய செனட் சபை எம்.பி.க்களும் அவருக்கு எதிராக வாக்களிப்போம் என கூறினர்.

இந்த நிலையில் திடீர் திருப்பமாக நீரா டாண்டனின் நியமனத்தை வாபஸ் பெறுவதாக ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார். நீரா டாண்டனின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.‌

குறித்த பதவிக்கான வேட்புமனுவிலிருந்து தனது பெயரைத் திரும்பப் பெறக்கோரிய நீரா டாண்டனின் கோரிக்கை ஏற்று கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்