2019ஆம் ஆண்டில் அழகை சிதைத்த மோசமான அறுவைசிகிச்சைகள்!

Report Print Abisha in உலகம்

வெளிநாடுகளில், அதிகரித்துவரும் பிளாஸ்டிக் சர்ஜரி முறை பலருக்கு ஆபத்தாகவே முடிந்துள்ளது. அதிலும் குறிப்பாக பலமுறை ஒரே இடத்தில் அறுவைசிகிச்சை செய்யும்போது இரத்த இழப்பு, தொற்று போன்றவை ஏற்பட்டு உயிரிழக்கின்றனர். அந்தவகையில் 2019ஆம் ஆண்டில் உடலில் அழகு சேர்க்க பலர் செய்து கொண்ட மோசமான அறுவை சிகிச்சைகள் பற்றி பார்க்கலாம்

புளோரிடா பெண் செய்த மார்பக அறுவைசிகிச்சை

புளோரிடாவை சேர்ந்த லிண்ட்சே கொலோசிமோ என்ற பெண், கொலம்பியாவிற்கு மார்பக அழகை கூட்டவும் வயிறுபகுதியை பிட்டாக வைக்கவும் சென்றுள்ளார். அங்குள் மருத்துவமனையில் அவருக்கு அறுவைசிகிச்சை நடந்துள்ளது. ஆனால், அறுவை சிகிச்சை முடிந்ததும் கொலோசிமோ ஏதோ தவறு நடந்தது போன்று உணர்ந்துள்ளார். அதன்பின் அவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து பார்த்துவிட்டு மீண்டும் புளோரிடாவிற்கு திரும்பியுள்ளார்.

ஆனால், வீடு திரும்பியபின் அவருக்கு மார்பகம் மற்றும் வயிற்று பகுதியில் மோசமான வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர் E. coli என்ற தொற்று அவரது மார்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் அவரது வயிறு மற்றும் உடல் பிட்டாக மேலும் அறுவைகிச்சை தேவைபடும் என்று தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து தெரிவித்த கொலோசி, நான் உண்மையில் முழுமையாகதான் இருந்தேன். ஆனால், இந்த முடிவு என்னை செத்து பிழைக்க செய்தது என்று தெரிவித்துள்ளார்.

Caters News Agency
Caters News Agency
குறைந்த விலையில் உதட்டழக்கு சேர்க்க சென்ற பெண்

Lauren Winstanley என்ற 18வயது பெண் நண்பர்களின் அறிவுரையின் அடிப்படையில் குறைந்த விலையில் உதட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதற்கு $220 வழங்கியுள்ளார். சில நாட்களில், சீழ்வடித்து புண்ணாக மாறிய உதடு, பின் காய்ச்சல் உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை கொடுத்துள்ளது.

தனக்கு நிகழ்ந்த தவறை உணர்ந்த Lauren Winstanley தற்போது அதற்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

Kennedy News & Media
Kennedy News & Media
Kennedy News & Media
ரஷிய பாப்பாய்

23வயதான ரஷியாவை சேர்ந்த Kirill Tereshin தனக்கு பாப்பாய் போன்ற கைகள் வேண்டும் என்று ஆசைப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

அதன்பின் அவரை பார்த்த பலரும் பாப்பாய் என்றே அழைத்தனர். அந்த பாப்பாய் கைகள் நீடிக்க “petroleum jelly”-யை அவர் தொடர்ந்து பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், அது அவருக்கு பெரும் தொற்றை ஏற்படுத்தியது. இதனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கைகள் சதை நிச்சயம் குறைக்க வேண்டும். இல்லை என்றால் அது உயிரை பறித்துவிடும் என்று எச்சரித்தனர்.

மேலும், அது உடலின் மற்ற பாகங்களை பாதிக்காதது, Kirill Tereshin-ன் அதிஷ்டம் மட்டுமே என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் சதைகுறைப்பிற்கு Tereshin சிகிச்சை பெற்று வருகிறார்.

East2West
East2West
East2West
தொடை அழகை கூட்ட பிரேசில் பெண் செய்த அறுவை சிகிச்சை

ஏஞ்சலா பெட்ரோசா என்ற பெண் நண்பர் ஒருவரின் அறிவுரையின் பேரில் தொடை அழகை கூட்ட அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அவரது தொடையில் 300 மில்லிலிட்ட அளவுள்ள பொருளை செலுத்தியபின் அது கடுவலியை ஏற்படுத்தியது. அது ஏஞ்சலாவின் அழகான சதைகளை அழுக செய்தது.

அதன்பின் மருத்துவர்கள் எதிர்வினை மருந்துகளை புகுத்தி காயத்தை குணப்படுத்த முயற்சித்தனர். அதன்விளைவாக மோசமான தொடை மற்றும் பின்பக்கம் உரு மாறியது. கடும் வலிக்கு பின் தற்போது பழைய நிலைமைக்கு கொண்டு வர ஏஞ்சலா முயற்சி செய்து வருகிறார்.

Focus On News Agency
Focus On News Agency
உடல் எடைகுறைக்க பெண் செய்து கொண்ட அறுவைசிகிச்சை

உடல் எடையை குறைக்க 53 வயதான Montana என்ற பெண் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். $4,000 செலவு செய்த அவர் அறுவை சிகிச்சைக்கு பின் தோல் கறுப்பு நிறத்தில் மாறுவதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

வயிற்று பகுதியில் உள்ள தையல்கள் பிரித்ததும் அது மோசமான வடுக்களாக மாறியுள்ளது. இது குறித்து கொலம்பியாவை சேர்ந்த மருத்துவர்கள் சுகாதாரமற்ற முறையில் இந்த அறுவை சிகிச்சை நடந்திருக்கலாம் என்று தெரிவித்தாக Montana பகிர்ந்துள்ளார்.

தற்போது வெளியில் செல்ல கூச்சமாக உள்ளது என்று கூறும் Montana பிகினி உடை அணிய இயலவில்லை என்று வருந்துகிறார். மேலும், இதற்கு நீதி கிடைக்க தான் போராடி வருவதாகம் தெரிவித்துள்ளார்.

Caters News Agency
Caters News Agency

பெண்ணிற்கு மார்பகத்தில் இருந்து வீசிய அழுகிய வாசனை

ஹோலி மெக்கல்லோக் என்ற 28வயதாக பெண் துருக்கியில் உள்ள அழகு கூட்டும் நிலையத்திற்கு மார்பக அழகை கூட்ட $3,500 பணம் செலுத்தியதாக தெரிவித்தார். அதன்பின் அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. அதில், மார்பகத்தில் 7சென்றிமீற்றர் அளவிற்கு துளை ஏற்பட்டுள்ளது.

அதை கவனித்த மெக்கல்லோக், தொடர்ந்து அழுகிய இறச்சியின் வாசனையை உணர்ந்துள்ளார்.

இது குறித்து தெரிவித்துள்ள மெக்கல்லோக் இந்த அறுவை சிகிச்சை நிலையம் பற்றி இன்ஸ்டாகிராமில்தான் பார்த்தேன். ஆனால், இதுபோன்ற நிலையில் மற்றொரு மருத்துவமனையில் உடல் நலன் தேற சிகிச்சைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SWNS
SWNS

மேலும் உலகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்