மாவை காலால் பிசைந்து உணவு தயாரித்த உணவகம்: அதிர்ச்சி வீடியோ

Report Print Deepthi Deepthi in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

டெல்லியில் உள்ள பிரபல உணவகம் ஒன்று மாவை காலால் பிசைந்து சமையல் செய்த வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள கேகா டா என்ற உணவகம் (Kake-Da-Hotel) பிரபலமான உணவகம் ஆகும். இந்த உணவகத்திற்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் கூட்டம் அதிகம்.

இந்நிலையில், இந்த உணவகத்தில் சப்பாத்தி மற்றும் புரோட்டா செய்வதற்காக மாவை காலால் மிதித்து ஊழியர் ஒருவர் பிசைந்து கொண்டிருக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

காலால் பிசையப்படும் மாவில் தான் சமையல் செய்யப்படுகிறது என தெரியவந்துள்ளது. தற்போது இந்த வீடியோ டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

இதனைப்பார்த்த பலரும், அந்த உணவகத்தை திட்டி கருத்து வெளியிட்டுள்ளனர். தற்போது டெல்லியின் உணவு துறையிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உணவகத்தை சோதனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments