வெள்ளையாவதற்கு இந்த ஒரு பொருள் போதுமே

Report Print Kavitha in அழகு
0Shares
0Shares
lankasri.com

முகத்தின் அழகை அதிகரிக்க உதவும் ஓர் அற்புதமான அழகுப் பொருள் தான் முல்தானி மெட்டி, இதனை கொண்டு எவ்வாறு முகத்தை அழகாக்குவது என்று பார்ப்போம்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர்

ஒரு சிறிய கிண்ணத்தில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு, ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவுங்கள்.

இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவோடும் பிரகாசமாகவும் இருக்கும்.

முல்தானி மெட்டி, பாதாம், பால்

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட்டுடன், 1 டேபிள் ஸ்பூன் பால் மற்றும் சிறிது முல்தானி மெட்டி பொடி சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

முகத்தை நீரால் கழுவி, தயாரித்து வைத்துள்ள கலவையை முகத்தில் தடவி காய்ந்த பின் நீரால் கழுவுங்கள். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், சருமம் மென்மையாக இருக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் தக்காளி

ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ், 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி, 1 டீஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

அதை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவுங்கள். இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.

முல்தானி மெட்டி மற்றும் தேன்

ஒரு கிண்ணத்தில் 3 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டீஸ்பூன் தக்காளி ஜூஸ், 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 டீஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இப்படி வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போட்டால், முகம் பிரகாசமாகவும் புத்துணர்ச்சியுடனும் காட்சியளிக்கும்.

முல்தானி மெட்டி மற்றும் புதினா

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் புதினா பொடி மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும், பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி அடிக்கடி இந்த ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால், முகத்தில் உள்ள கருமையான படலத்தைப் போக்கலாம்.

முல்தானி மெட்டி மற்றும் சந்தன பவுடர்

ஒரு கிண்ணத்தில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கலவையை முகம் முழுவதும் தடவி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து பின் நீரால் கழுவ வேண்டும்.

இந்த கலவையை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் வழியும் அதிகப்படியான எண்ணெய் வெளியேறி, முகம் பளிச்சென்று வெள்ளையாக காணப்படும்.

முல்தானி மெட்டி மற்றும் பப்பாளி

1 டேபிள் முல்தானி மெட்டி பொடி, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பப்பாளி கூழ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

அதனை முகத்தில் சரிசமமாக தடவி, நன்கு காய வைத்து, பின் நீரால் கழுவ வேண்டும். இந்த வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால், விரைவில் வெள்ளையாகலாம்.

முல்தானி மெட்டி மற்றும் எலுமிச்சை சாறு

ஒரு கிண்ணத்தில் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொண்டு பின் அதை முகத்தில் தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.

இந்த கலவையை தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, முகப்பரு வருவது தடுக்கப்பட்டு முகம் பொலிவு பெறும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்