இலங்கையில் தமிழ் மக்கள் மதிக்கப்படுகின்ற இனமாக மாற வேண்டும்! கனடிய பிரதமர்

Report Print Murali Murali in கனடா
0Shares
0Shares
lankasrimarket.com

இலங்கையில் தமிழ் மக்கள் மதிக்கப்படுகின்ற ஒரு இனமாக மாற வேண்டும் எனவும், அதற்காக அரசியல் ரீதியாக உரிமைகள் தொடர்பான சட்ட மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் எனவும் கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் கனடா அரசாங்கம் சர்வதேச ரீதியாக குரல் கொடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கனடியத் தமிழர் பேரவையினரால் வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் தமிழர் தெரு விழா 3ஆவது முறையாக இவ்வாண்டும் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், கனடாவின் ஸ்காபுறோ நகரில் இன்று நடைபெற்ற "தமிழர் தெருவிழாவில்" சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறித்த நிகழ்வில் அந்நாட்டு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்