காதலியை திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை: ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Harishan in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

கனடா நாட்டின் பிரபல நடிகை Ellan Page தனது காதலியான Emma Portner-ஐ திருமணம் செய்து கொண்டதாக இன்ஸ்டாகிராம் மூலம் அறிவித்துள்ளார்.

கனடா நாட்டின் பிரபல நடிகையாக வலம் வருபவர் Ellan Page(வயது 30), இவருக்கும் 23 வயது நடனக் கலைஞரான Emma Portner என்னும் பெண்ணுக்கும் காதல் இருந்ததாக கிசுகிசுக்கள் எழுந்தன.

அதன்பின் வெளிப்படையாகவே இருவரும் டேட்டிங் செல்வது உள்ளிட்ட செயல்களின் மூலம் தாங்கள் காதலித்து வருவதை உலகிற்கு தெரியப்படுத்தினர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் Ellan Page அறிவித்துள்ளார்.

அவரைப் பின்தொடர்பவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சில ரசிகர்கள் வருத்தம் தெரிவித்து வருவதாகவும் தெரிகிறது.

மேலும், "இப்படியொரு அழகான பெண் Emma, என் வாழ்க்கைத் துணையாக கிடைத்ததை நம்ப கூட முடியவில்லை" என மகிழ்ச்சி அடைந்துள்ளார் Ellan Page.

இதற்கு முன்பு சமந்தா தாமஸ் என்னும் நடிகையுடன் 18 மாதங்கள் காதலில் இருந்து பின்னர் பிரிந்தவர் Emma என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்