நடிகை பாவனா கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பை விட்டு பிடித்ததாக டி.ஜி.பி பேட்டி

Report Print Santhan in சினிமா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல நடிகை பாவனா கடந்த பிப்ரவரி மாதம் 17-ஆம் திகதி படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.

இது தொடர்பாக பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

பிறகு பாவனா கடத்தல் பின்னணியில் நடிகர் திலீப்பிற்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது, அதன் பின் நடந்த விசாரணையில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பாக டி.ஜி.பி. லோக்நாத்பெக்ரா கூறுகையில், நடிகை கடத்தல் வழக்கில் முதல் கட்ட விசாரணையிலே குற்றவாளி யார் என்பதை அறிய முடிந்ததாகவும், அவர்களை பொலிசாரால் கைது செய்ய முடியும் என்பதை கண்டறிந்ததோம்

ஆனால் பொலிஸ் எப்போதும் குற்றவாளிகளை விட்டுதான் பிடிக்கும். எந்த வழக்கிலும் ஆதாரம் என்பது மிகவும் முக்கியம் என்பதால் வலுவான ஆதாரங்களை திரட்டுவதற்காக நாங்கள் தீவிர விசாரணை நடத்தி வந்ததாகவும், ஆதாரங்கள் சிக்கிய பிறகு குற்றவாளியை கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments