இந்தியாவின் படுதோல்விக்கான காரணங்கள் இதோ

Report Print Deepthi Deepthi in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் இறுதியாட்டத்தில், 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்ற பாகிஸ்தான், முதல் முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை கைப்பற்றியது.

இந்தியாவின் இந்த படுதோல்விக்கான காரணங்கள் இதோ,

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களின் அதிரடி ஆட்டம்

பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்திலேயே தங்கள் அதிரடியை காட்ட ஆரம்பித்தனர், ஆரம்ப ஆட்டக்காரர்களான, அஸார் அலி மற்றும் ஜமான் ஆகிய இருவரும் அதிடியாக ஆடி 106 பந்துகளில், 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் விளாசினர்.

இவர்களை பிரிக்க முடியாமல் இந்தியாவின் பந்துவீச்சி திணறியது, ஜமான் 3 ஓட்டங்களில் இருந்த போது பும்ராவின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். ஆனால் அவர் அதிர்ஷ்டம் அது நோ-பாலானது.

இதைப் பயன்படுத்திக் கொண்ட பஹார் ஜமான், இந்திய பந்து வீச்சை சிதறடித்து தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அவர் எடுத்த ஓட்டங்கள் 114.

இதனால் பாகிஸ்தான் ஓட்டங்கள் விகிதம் அதிகரித்தது, இதே போன்று, பாகிஸ்தான் இன்னிங்ஸின் இறுதி கட்டத்தில், தனது அதிரடி ஆட்டத்தால் முகமது ஹஃபிஸ் 37 பந்துகளில் 57 ஓட்டங்கள் எடுத்தார்.

இதனால், 339 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை வெற்றி இலக்காக பாகிஸ்தானால் நிர்ணயிக்க முடிந்தது.

நோ பால்

இந்திய பந்துவீச்சில், வைட் மற்றும் நோபால் போன்ற 16 உதிரி ஓட்டங்களை இந்திய பந்துவீச்சாளர்கள் விட்டுக்கொடுத்தனர்.

3 ஓட்டங்கள் எடுத்த நிலையில், பூம்ரா பந்துவீச்சில் பாகிஸ்தான் தொடக்க வீரர் ஃபகார் ஜமான் ஆட்டமிழந்த போதும், அந்த பந்து 'நோபால்' என்பதால் அவர் ஆட்டமிழக்காமல் தப்பினார்.

இதன் பின்னர் அதிரடியாக விளையாடிய அவர், 114 ஓட்டங்கள் பெற்றார்.

சோபிக்காத பந்துவீச்சு

சுழல் பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் அதிக அளவில் ரன்களை வாரிக் கொடுத்தனர்.

அஸ்வின் தான் வீசிய 10 ஓவர்களில் 70 ஓட்டங்களையும், ஜடேஜா தான்வீசிய 8 ஓவர்களில் 67 ஓட்டங்களையும் வழங்கியது இந்திய அணிக்கு பாதிப்பாக அமைந்தது.

இதே போல், ஜஸ்பீர்த் பூம்ராவும் தனது பந்துவீச்சில் அதிக அளவில் ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

முன்னணி வீரர்களின் ஆட்டமிழப்பு

இந்திய மட்டைவீச்சாளர்கள் யாருமே களத்தில் நிலைத்து நிற்காதது தோல்விக்கு ஒரு முக்கிய காரணமாகும்.

யுவராஜ்சிங் மற்றும் தவான் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்த நிலையில், டோனி மற்றும் ஜாதவ் ஆகிய இருவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

முன்னணி வீரர்கள் பலரும் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணிக்கு நம்பிக்கையூட்டும் வகையில், ஹர்திக் பாண்ட்யா மட்டுமே அதிரடி ஆட்டம் மேற்கொண்டு 70 ஓட்டங்கள் எடுத்தார்.

வியூகம் வகுக்க தவறிய இந்தியா

எதிரணியை தடுமாறி ஆட வைப்பதில் வியூகம் வகுப்பதில் டோனி திறமையானவர். 10 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டி20 போட்டியில், கைக்கு எட்டும் தூரத்தில் ஸ்கோர் இருந்தபோதும், களத்தில் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான மிஸ்பா உல்ஹக் நின்றபோதிலும், வியூகத்தை மாற்றி அமைத்தார் டோனி. புதுமுகம் ஜோகிந்தர் ஷர்மாவை பந்துவீச அழைத்தார்.

பாகிஸ்தானின் கடைசி விக்கெட்டாக மிஸ்பா உல்ஹக்கை வீழ்த்தியது அதே ஜோகிந்தர் ஷர்மாதான். ஸ்ரீசாந்த் கேட்ச் பிடித்தார். 152 ஓட்டங்களில் ஆல்அவுட்டானது பாகிஸ்தான். டோனியின் வியூகம் உலகமெங்கும் பாராட்டப்பட்டது.

ஆனால் நேற்றைய ஆட்டத்தில் துடுப்பாட்டத்தில் எந்த வியூகத்தையும் கோஹ்லி வகுக்கவில்லை, தனது ஆக்ரோஷ ஆட்டத்தை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments