பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்ற இந்திய அணி: மனமுடைந்த ரசிகர் தற்கொலை

Report Print Nithya Nithya in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த சாம்பியன்ஸ் கிண்ணம் இறுதிப் போட்டியில் இந்திய அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி முதன்முறையாக கிண்ணத்தை வென்றது.

இந்திய அணி தோல்வியடைந்ததால், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்திய அணியின் ரசிகர் ஒருவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

வங்கதேசத்தின் ஜமல்பூர் நகரைச் சேர்ந்தவர் 25 வயதான பிட்யூத். இந்திய அணியின் தீவிர ரசிகரான இவரால், சாம்பியன்ஸ் கிண்ணம் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்றதை ஏற்க முடியவில்லை.

இந்திய அணியின் தோல்வியால் மனமுடைந்து காணப்பட்ட பிட்யூத், ஓடும் ரயில் முன்பாய்ந்து நேற்றிரவு தற்கொலை செய்துகொண்டதாக ரயில்வே பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நசிருல் இஸ்லாம் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments