இங்கிலாந்துக்கு 354 ஒட்டங்கள் இலக்கு நிர்ணயித்த அவுஸ்திரேலியா: ஆஷஸ் 2வது டெஸ்ட்

Report Print Kabilan in கிரிக்கெட்
83Shares
83Shares
lankasrimarket.com

ஆஷஸ் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு, 354 ஒட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்துள்ளது.

அடிலெய்டில் நடந்து வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில், அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 442 ஒட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து 227 ஒட்டங்களில் சுருண்டது. இதனைத் தொடர்ந்து, 215 ஒட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய அவுஸ்திரேலியா, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 53 ஒட்டங்கள் எடுத்திருந்தது.

இந்நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டதினைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய வீரர்கள், இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தனர்.

இதனால் வெறும் 138 ஒட்டங்களுக்கு அவுஸ்திரேலியா ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கவாஜா மற்றும் ஸ்டார்க் தலா 20 ஒட்டங்கள் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில், ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், வோக்ஸ் 4 விக்கெட்டுகளும், ஓவர்டான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலமாக இங்கிலாந்து அணிக்கு 354 ஒட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பின்னர், இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து தற்போது வரை, 3 விக்கெட்டுகளை இழந்து 145 ஒட்டங்கள் எடுத்துள்ளது.

ஜோ ரூட் 51 ஒட்டங்களுடனும், மலன் 15 ஒட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்