சினிமாவை சினிமாவாகப் பார்க்க வேண்டும் - காலா படம் பார்த்த தமிழிசை

Report Print Trinity in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் காலா படத்தை பாஜக தலைவர் தமிழிசை தனது சக பாஜக உறுப்பினர்களுடன் தியேட்டரில் சென்று பார்த்திருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் காலா படம் இன்று வெளியாகியுள்ளது.

இப்படத்தில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை பற்றி பல்வேறு விதமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ள நிலையில் பாஜக தலைவரே சென்று இப்படத்தை முதல் நாளன்று பார்த்தது பரபரப்பை கிளப்பியுள்ளது.

படம் குறித்த அவரது கருத்தை கேட்கையில் படம் கருப்பாக ஆரம்பித்து கலராக முடிந்துள்ளதாக குறிப்பிட்டார். காலா படத்தில் சில வண்ணங்களை விட பல்வேறு வண்ணங்கள் அதிகமாக வந்துள்ளன என்று அவர் சங்கேதமாக தெரிவித்திருந்தார்.

சினிமா வழக்கை வேறு அரசியல் வாழ்க்கை வேறு ரஜினி பல அரசியல் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இது மட்டுமே அவரது முதல் அரசியல் திரைப்படமல்ல என்றும் தெரிவித்தார்.

சகோதரர்கள் அனைவருடனும் ஒன்று சேர்ந்து படம் பார்க்க ஆசைப்பட்டதால் காலா படத்திற்கு வந்ததாக தெரிவித்த தமிழிசை, சமூக சிந்தனைகள் கொண்ட படம்தான் தனக்கு அதிகம் பிடிக்கும் என்பதால் காலா படத்தை பார்க்க முடிவெடுத்ததாக கூறினார்.

சினிமாவை சினிமாவாக பார்க்க வேண்டும். பாஜக கருத்துக்களை படம் விமர்சித்திருப்பதை தான் அப்படியே பார்ப்பதாக கூறினார். படத்தை அரசியலுடன் இணைத்து பார்த்தால் நிச்சயம் நிச்சயம் பிரிவைத்தான் சந்திக்க வேண்டியிருக்கும் என்று கூறினார் தமிழிசை.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்