துப்பாக்கியை காட்டி மனைவியை மிரட்டிய கணவர்: பொலிசார் சுட்டதில் பலியான பரிதாபம்

Report Print Harishan in பிரான்ஸ்
0Shares
0Shares
Cineulagam.com

பிரான்ஸில் துப்பாக்கியை காட்டி மனைவியை மிரட்டிய நபரை பொலிசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரிஸின் 15-வது வட்டாரத்தில் உள்ள மருந்தகம் ஒன்றின் அருகே நின்று கொண்டிருந்த ஒரு தம்பதியருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் தகராறாக மாறிய நிலையில் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் குறித்த நபருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் அந்த நபர் துப்பாக்கியை காண்பித்து தன் மனைவியை மட்டுமின்றி பொலிசாரையும் மிரட்டியுள்ளார், இதனால் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்