அஜாக்கிரதையால் 6 பேர் பலியான பரிதாபம்: தந்தை மீது வழக்கு பதிவு

Report Print Peterson Peterson in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் தந்தை ஒருவரின் அஜாக்கிரதை காரணமாக மகன்கள் உள்பட 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அவர் மீது பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேற்கு பவேரியா மாகாணத்தில் உள்ள Arnstein நகரில் 52 வயதான தந்தை ஒருவர் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் மகன்கள் இருவரும் நண்பர்களை வரவழைத்து வீட்டில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் மின்சாரம் தடைப்படாமல் இருப்பதற்காக தந்தை புதிதாக ஜெனரேட்டர் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

ஆனால், பெட்ரோல் மூலம் இயங்கும் ஜெனரேட்டரை எந்த இடத்தில் வைக்க வேண்டும்? எப்படி இயக்க வேண்டும் என்ற விதிமுறைகளை தந்தை படிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது இரண்டு மகன்கள் மற்றும் அவர்களுது 4 நண்பர்கள் வீட்டில் உள்ள தனி அறையில் இருக்கிறார்கள் என்பதை தந்தை அறிந்திருக்கவில்லை.

பின்னர், வாலிபர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகில் இருந்த மற்றொரு அறையில் ஜெனரேட்டரை வைத்து இயக்கிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.

இரவு நேரத்தில் பார்ட்டி முடிந்ததும் வாலிபர்கள் அனைவரும் படுக்கைக்கு சென்றுள்ளனர்.

துரதிஷ்டவசமாக ஜெனரேட்டரில் இருந்து வெளியான கார்பன் மோனாக்ஸைடு வாயு வீடு முழுவதும் பரவிய நிலையில், அதனை சுவாசித்த 6 வாலிபர்களும் மயக்கமடைந்து பின்னர் உயிரிழந்துள்ளனர்.

மகன்களையும், நண்பர்களையும் தேடிய தந்தை பின்னர் வீட்டில் உயிரிழந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அவராகவே பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

அஜாக்கிரதையாக செயல்பட்டு 6 பேர் உயிரிழந்த குற்றத்திற்காக தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அபராதம் அல்லது 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்