புகலிடக் கோரிக்கையாளர்களால் அச்சத்தில் வாழும் ஜெர்மன் மக்கள்

Report Print Vethu Vethu in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் அந்நாட்டு மக்கள் அச்ச நிலையில் உள்ளதாக ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகளவான கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

முன்னைய காலங்களை விடவும் பயங்கரவாதம் தொடர்பில் அதிகளவு அவதானம் செலுத்தப்பட்டுள்ள முதல் சந்தர்ப்பம் இதுவென ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மன் நாட்டின் அன்றாட வாழ்க்கையில் அழுத்தம் பிரயோகிக்கப்படும் விடயங்களில் அதிக அவதானம் செலுத்தும் விடயங்கள் தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் 70 வீதமானோர் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கடந்த காலங்களில் ஐரோப்பா முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஐ.எஸ் மற்றும் ஜிஹாட் தீவிரவாத தாக்குதல்களில் அதிகமான நேரடி தாக்குதல்கள் ஜெர்மன் மீதே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த வருடம் ஜெர்மன் மிக மோசமான பல தீவிரவாத தாக்குதல்களுக்குள்ளாகியுள்ளது. நத்தார் வர்த்தக நிலையத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மிகப் பெரியதாக கருதப்படுகின்றது.

இந்த அனைத்து பயங்கரவாத தாக்குதல்களும் ஐரோப்பாவில் புகலிடம் கோரி உள்நுழைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் ஜேர்மன் சார்லஸ் ஏஞ்சலா மெர்கல் கடுமையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார்.

R+V எனப்படும் ஆய்வு அறிக்கைக்கமைய ஜெர்மனில் பயங்கரவாதத்திற்கு அடுத்தபடியாக, அரசியல் மற்றும் மூன்றாம் இடத்தில் சட்டவிரோத புகலிடகோரிக்கையாளர் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அதன் பின்னர் ஐரோப்பாவின் கடன் மற்றும் வாழ்க்கை செலவு அதிகரிப்பு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜெர்மனில் அதிகமானோர், தற்போது பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு பயந்து தங்கள் அன்றாட வாழ்க்கையை மேற்கொள்வதாக உறுதியாகியுள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்