ஜேர்மனியில் செல்ஃபி மோகத்தால் இரண்டு இளம்பெண்களுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

Report Print Balamanuvelan in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் இரண்டு பெண்கள் செல்ஃபி எடுக்கும்போது மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தனர்.

உடைகள் கிழிந்த நிலையில் 23 மற்றும் 21 வயது மதிக்கத்தக்க இரு இளம்பெண்கள் தரையில் விழுந்து கிடப்பதைக் கண்ட வழிப்போக்கர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

மருத்துவ உதவிக் குழுவினர் வந்தபோது அந்த பெண்களில் 23 வயதுள்ள இளம்பெண் சுயநினைவற்ற நிலையில் கிடந்தார்.

அவருக்கு செயற்கை சுவாசம் கொடுத்து சுய நினைவுக்கு கொண்டு வர மருத்துவ உதவிக்குழுவினர் போராட வேண்டியிருந்தது.

அவர் இன்னும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார்.

மற்றொரு பெண், தாங்கள் நடந்து கொண்டிருக்கும்போது கடைசியாக ஒருவரையொருவர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததுதான் நினைவில் இருப்பதாகக் கூறினாள்.

அவளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்றாலும் அவள் உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை.

மேற்கு ஐரோப்பா முழுவதுமே கடந்த சில நாட்களாக பலத்த புயல் காற்று வீசி வருவது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஐந்தரை அடி உயரம் வரையில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் சாலைகளும் தரைதளங்களும் தண்ணீருக்கடியில் மூழ்கியுள்ளன.

நேற்று நாட்டின் பல இடங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்