31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு மகளை சிறைப்பிடித்த 90 வயது கணவன்!

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

சவுதியை சேர்ந்த 90 வயது முதியவர், தனது 31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு, மகளை சிறைப்பிடித்து வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தெலஙானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்தவர் ஷபானா சுல்தானா (38). இவர், சவுதி அரேபியாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு, அந்நாட்டிலேயே குடியிருந்து வருகிறார்.

சவுதி குடியுரிமையும் பெற்றுள்ள ஷபானா சுல்தானாவுக்கு, சில ஆண்டுகளுக்குப் பின்னர்தான், தனது கணவர் ஒரு பாலியல் வெறிபிடித்த நபர் என்பது தெரியவந்தது.

ஷபானாவுக்கு முன்பாகவே, 30 இளம்பெண்களை திருமணம் செய்துள்ள அந்த நபர், ஷபானாவை 31வது மனைவியாகவே, திருமணம் செய்துகொண்டுள்ளார். இதுதெரியவந்ததும் ஷபானா அதிர்ச்சி அடைந்தார். எனினும் சகித்துக் கொண்டு திருமண வாழ்க்கையை தொடர்ந்த அவருக்கு தற்போது 2 மகன்கள் மற்றும் ஒரு இளம் வயது மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அண்மைக் காலமாக ஷபானாவுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த அவரது 90 வயது கணவர், ஷபானாவை ஐதராபாத்தில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஷபானா உடன் 2 மகன்களையும் அனுப்பிய அந்த நபர், மகளை மட்டும் அனுப்பி வைக்கவில்லை.

ஒருவேளை தனது மகளை அவர் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கலாம் என்ற அச்சத்தில் தற்போது ஷபானா புகார் தெரிவித்துள்ளார். மட்டுமின்றி இதுதொடர்பாக சவுதி அரசு மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சகத்திடம் புகார் கூற உள்ளதாகவும் ஷபானா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments