மீண்டும் முதல்வர் மாற்றம்? தமிழக முதல்வராகிறார் தினகரன்! வெளியான பரபரப்பு தகவல்

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

தமிழகத்தில் மீண்டும் முதல்வர் மாற்றம் வரும் என்றும், அப்போது தமிழக முதல்வராக டி.டி.வி.தினகரன் இருப்பார் என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்துறை, நிதி, பொதுப்பணித்துறை உள்ளிட்ட மூன்று பெரிய துறைகள் ஒதுக்க காரணம் என்ன என்பது குறித்த தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பொதுப்பணித்துறையை கவனித்து வந்தார். பன்னீர்செல்வம் நிதித்துறையை கவனித்து வந்தார். ஜெயலலிதா மரணம் அடைந்ததால் உள்துறை கூடுதலாக பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப்பட்டது.

இதற்கு காரணம், சசிகலா முதல்வராக பதவியேற்றுக் கொண்ட பிறகு உள்துறையை அவரிடம் இருந்து பறிக்க திட்டமிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர்கள் நினைத்தது நடக்காமல் சசிகலா எதிர்பாராதவிதமாக சிறைக்கு சென்றுவிட்டதால் நிலைமை வேறு மாதிரி சென்றுவிட்டது.

தற்போது எடப்பாடி பழனிச்சாமியிடம், ஜெயலலிதா, பன்னீர்செல்வம் ஆகிய இரண்டு பேரும் வகித்த துறைகளுடன், தான் ஏற்கனவே வகித்த துறைகளையும் சேர்த்து மூன்று முக்கிய துறைகளும் அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனால் எடப்பாடி முதல்வராக பதவி ஏற்றது, ஒரு தற்காலிக நடவடிக்கை தான் என்றும் விரைவில், அதாவது மே மாதம் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என்பதால் அங்கு அதிமுக கட்சியின் துணை பொதுச்செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்டுள்ள டி.டி.வி.தினகரன் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது.

அங்கு எப்படியாவது அவரை வெற்றிபெற வைப்போம். அப்போது மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்படும். அல்லது அதற்கு முன்னதாகவே தினகரன் முதல்வர் பதவியை ஏற்பார் என அதிமுக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

பொதுப்பணித்துறையை எடப்பாடி கவனிப்பார். நிதித்துறை வேறு ஒருவருக்கு ஒதுக்கப்படும். அதேபோன்று ஜெயலலிதா பயன்படுத்திய அறையையும், அதுவரை யாரும் பயன்படுத்த மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் தினகரன் முதல்வராக அந்த அறைக்கு வருவார் என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் உறுதிபட கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments