இளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன்! முடிந்தால் கைது செய்யுங்கள் என சவால்

Report Print Basu in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இளையராஜா-எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல்கள் இசையுலகில் பரபரப்பை கிளப்பி வரும் நிலையில் இசையமைப்பாளர் கங்கை அமரன் சவால் விடுத்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திற்கு தன் பாட்டை பாட கூடாது என இளையராஜா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த கங்கை அமரன் தற்போது மீண்டும் பரபரப்பு பேட்டியளித்துள்ளார்.

இளையராஜாவின் பாட்டை பாடிய கங்கை அமரன் கூறியதாவது, இளையராஜா தன் பாட்டை எந்த பாடகர்கள் பாடக் கூடாது என்ற மூர்க்கமான முடிவுக்கு வந்துள்ளார்.

இளையராஜா பாட்டு தான் மக்களின் மூச்சாக உள்ளது. இது இன்னும் விரிவடைந்தால் அனைவரும் பாட்டு சிடிக்களை திருப்பி கொடுக்க வேண்டும் என்ற நிலை வருமோ என்பது கேள்விக் குறியாக உள்ளது.

இதனால், திருமண நிகழ்ச்சிகளில் பாடும் சிறிய பாடகர்கள் கூட பாதிக்கப்படுவார்கள். இளையராஜாவின் கட்டுப்பாடுக்கு நான் உட்படமாட்டேன், நான் பாடுவேன் முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என சவால் விடுத்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments