மரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு

Report Print Fathima Fathima in இந்தியா
0Shares
0Shares
lankasri.com

குல்பூஷண் சிங் ஜாதவ் கொலை வழக்கில் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம் பாகிஸ்தான் அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றியவர் குல்பூஷண் சிங் ஜாதவ், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உளவு பார்த்த குற்றத்திற்காக கடந்தாண்டு மார்ச் மாதம் 3ம் திகதி கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோதமாக பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டதாக குல்பூஷண் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் குல்பூஷணுக்கு கடந்த மாதம் 10ம் திகதி மரண தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தின் உதவியை நாடிய இந்தியா மனுத்தாக்கல் செய்தது.

அதில், ஜாதவ் வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. வியன்னா சாசனத்தையும் கடைபிடிக்கவில்லை, எனவே மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.

இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில், இறுதி தீர்ப்பு வரும் வரை குல்பூஷணின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments