நடிகர் கமல்ஹாசன் பணத்துக்காக எந்த காரியத்தையும் செய்ய கூடியவர் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் கூறியுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில், தமிழக அரசின் அனைத்து துறையிலும் ஊழல் உள்ளது என கூறினார்.
இதற்கு தமிழக அமைச்சர்கள் பலர் ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இது குறித்து பேசிய தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம், பணத்திற்காக கமல் எந்த காரியத்தையும் செய்ய கூடியவர் என்றும் தமிழக அரசை விமர்சிக்க அவருக்கு தகுதியில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரைப் பற்றி இழிவாக பேசிய கமல் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.