புற்றுநோய் தாக்கியதை பெற்றோரிடம் மறைத்த சிறுவன்: நெகிழ வைக்கும் காரணம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் விவசாய குடும்பத்தில் பிறந்த சிறுவன் தமது பெற்றோர் வருத்தப்படுவார் என்ற காரணத்தால் தனக்கு புற்றுநோய் தாக்கியதை மறைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

13 வயதே ஆகும் சந்தோஷ் என்ற அந்த சிறுவனுக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்ததை அடுத்து குறித்த தகவலை தமது பெற்றோரிடம் தெரியப்படுத்த வேண்டாம் என முடிவு செய்துள்ளான்.

தமக்கு புற்றுநோய் தாக்கியுள்ளதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாது என கூறும் சிறுவன் சந்தோஷ், தமது பெற்றோரின் மகிழ்ச்சியை ஒருநாளும் தொலைக்க தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளான்.

ஆனால் ஏற்கெனவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாய்மாமாவிடம் தமது நிலை குறித்து தெரிவித்துள்ள சிறுவன், அதை எவரிடமும் தெரிவிக்க வேண்டாம் என கூறியுள்ளான்.

சிறுவன் சந்தோஷ் நோய்வாய்ப்பட்டிருப்பது குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்திருந்தபோதும், புற்றுநோய் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவரவில்லை.

மட்டுமின்றி சிறுவனும் பாட்டியும் புற்றுநோயால் இறந்துள்ளதால் தற்போது தமக்கும் புற்றுநோய் என்பதை அறிந்தால் குடும்பமே மிகவும் வருத்தப்படும் என சிறுவன் தெரிவித்துள்ளான்.

விரைவில் தாம் இறக்க இருப்பது தெரியும் என கூறும் சிறுவன், அதுவரை தமது குடும்பத்தினரை மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொள்வது தமது கடமை எனவும் சிறுவன் தெரிவித்துள்ளான்.

இதனிடையே சிறுவனின் சிகிச்சைக்காக பெருந்தொகை தேவைப்படுவதால் பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டும் நோக்கில் உதவி கோரியுள்ளார் சிறுவனின் தாய்மாமன்.

விவசாய குடும்பம் என்பதாலும், போதிய மழை இன்றி விவசாயம் பொய்த்துள்ளதாலும் கடும் நிதி நெருக்கடியில் உள்ளது சிறுவனின் குடும்பம்.

தற்போது சிறுவனின் சிகிச்சைக்காக 18,000 பவுண்டு வரை தேவைப்படுவதாகவும், படிப்பிலும் விளையாட்டிலும் மிகவும் சாமர்த்தியசாலியான சிறுவன் நடக்கவே முடியாத நிலையில் தவித்து வருவதாகவும் அவனது தாய்மாமா தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்