கமல்ஹாசனின் புதிய அரசியல் கட்சி எப்போது அறிவிப்பு?

Report Print Santhan in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

திரைப்பட நடிகரான கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை கூறி வருகிறார். இதனால் அவர் எப்போது வேண்டும் என்றாலும் அரசியலில் இறங்கலாம் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் கமலஹாசனின் நெருங்கிய நண்பர் ஒருவர் பிரபல ஆங்கில நாளிதல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது, கமல் இந்த மாத இறுதியில் தனது புதிய கட்சியை துவங்க இருப்பதாகவும், நவம்பர் மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலை குறிவைத்து கமல்ஹாசன் இம்மாதமே கட்சியை தொடங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கமல் தனது அரசியல் கட்சி அறிவிப்பு குறித்த பணிகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பதாகவும், விஜயதசமி அல்லது காந்தி ஜெயந்தி அன்று இந்த அறிவிப்பை வெளியிடலாம் என்று திட்டமிட்டு உள்ளதாகவும், இது குறித்து இன்னும் அவர் தனது ரசிகர் மன்ற தலைவர்களுடன் இறுதி விவரங்களை பகிந்து கொள்ளவில்லை என்பதால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்குவதற்குள் உடனே அவர்களிடம் அரசியல் கட்சி குறித்த தகவலை சொல்ல வேண்டிய கட்டாயத்தில் கமல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்