குறைந்த விலையில் ஒன்லைன் பேக்கப் சேவையை தரும் Degoo!

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்
0Shares
0Shares
lankasrimarket.com

தொழில்நுட்ப வளர்ச்சியின் அடுத்த கட்டமாக ஒன்லைன் சேவைகளே முக்கிய இடம் பெறுகின்றன.

இவற்றுள் ஒன்றுதான் ஒன்லைன் கிளவுட் ஸ்டோரேஜ் சேவையாகும்.

இச் சேவையினை பல்வேறு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

ஒவ்வொரு நிறுவனங்களும் வெவ்வேறு சேமிப்பு கொள்ளளவுகளை இலவசமாகவும், மாத மற்றும் வருட சந்தாக்களின் அடிப்படையிலும் வழங்கிவருகின்றன.

இவற்றில் Degoo நிறுவனமானது ஆயுட்கால சேவையாக 2TB சேமிப்பு வசதியினை வழங்கி வருகின்றது.

இதற்கு வழமையாக அறவிட்ட கட்டணத்தில் அதிரடிக் குறைப்பு மேற்கொண்டுள்ளது.

அதாவது சுமார் 95 சதவீதம் கட்டணக் கழிவு வழங்கியுள்ளது.

இதன்படி முன்னர் 1,200 டொலர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இச் சேவை தற்போது 59.99 டொலர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

இது Dropbox, OneDrive, மற்றும் Google Drive தரும் ஒன்லைன் ஸ்டோரேஜ் சேவைகளை விடவும் இலாபகரமானதாகும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்