International
Notification
Notification
Submit Cancel

முதன்முறையாக அதிகூடிய நினைவகத்துடன் வெளியாகும் கைப்பேசி

Topics :
advertisement

ஸ்மார்ட் கைப்பேசிகளின் சிறப்பான செயற்பாட்டிற்கு பிரதான நினைவகமானது முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதன் அளவு அதிகரிக்க அதிகரிக்க கைப்பேசிகளின் செயற்பாட்டு வேகமும் அதிகரிக்கும்.

இதுவரை வெளியான ஸ்மார்ட் கைப்பேசிகளில் அதிகூடிய பிரதான நினைவகமாக 6 GB RAM தரப்பட்டிருந்தது.

ஆனால் முதன்முறையாக இதனை விட கூடிய பிரதான நினைவகத்துடன் தனது புதிய கைப்பேசியினை நோக்கியா அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள Nokia 9 கைப்பேசியில் 8 GB RAM உள்ளடக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தவிர 5.3 அங்குல அளவுடைய QHD தொடுதுதிரை, Snapdragon 835 Processor, 64 GB சேமிப்பு நினைவகம், 13 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா என்பனவற்றினையும் உள்ளடக்கியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூகுளின் Android 7.0 Nougat இயங்குதளத்தில் செயற்படக்கூடிய இக் கைப்பேசியின் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement