போக்குவரத்து நெரிசலை குறைக்க Pod Taxi

Report Print Fathima Fathima in வாகனம்
0Shares
0Shares
lankasrimarket.com

இந்தியாவில் பெருநகரங்களில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பெங்களூரில் Pod Taxi-களை நடைமுறைப்படுத்த திட்டம் வகுக்கப்படுகிறது.

ரோப் கார் போன்று கம்பி வடத்தில் தொங்கியவாறு இந்த டாக்ஸிகள் பயணிக்கும்.

பெங்களூரில் உள்ள எம்ஜி சாலையிலிருந்து பழைய விமான நிலைய சாலையில் உள்ள லீலா பேலஸ் சாலை சந்திப்பு வரையிலும் 4 கிமீ தூரத்திற்கு ஒரு வழித்தடத்திலும், அதிலிருந்து மார்த்தஹள்ளி வரையிலும் 6 கீமீ தூரத்திற்கு மற்றொரு வழித்தடமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், நகரின் முக்கியப் பகுதியாக விளங்கும் இந்திரா நகர் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சோனி வேர்ல்டு ஜங்ஷன் வரை 6.7 கிமீ தூரத்திற்கு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்த அமெரிக்க நிறுவனம் உட்பட மூன்று நிறுவனங்கள் முன்வந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பெங்களூர் மாநகரம் ஆலோசித்து வருகிறது.

மேலும் வாகனம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்