வாழ்நாள் முழுவதும் இவர் தான் ஜனாதிபதி: சீனாவின் புதிய சர்வாதிகாரத் தலைவராக ஜின்பிங்?

Report Print Santhan in ஏனைய நாடுகள்
0Shares
0Shares
lankasri.com

சி ஜின்பிங் அவரது வாழ்நாள் முழுமைக்கும் சீன ஜனதிபதியாக நீடிக்கும் வகையில் சீன நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் முறையாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் சீன ஜனாதிபதியாகவும் ஷி ஜிங்பிங் பொறுப்பேற்றார்.

கடந்த ஆண்டு இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு அவர் தெரிவு செய்யப்பட்டார். 2023-ஆம் ஆண்டு வரை இவரது பதவிக்காலம் உள்ள நிலையில், அடுத்து இவர் ஜனாதிபதியாக முடியாது.

ஏனெனில் சீனாவில் ஜனாதிபதி பதவியில் ஒருவரே இருமுறைக்கு மேல் பதவியில் இருக்க கூடாது என்ற சட்ட திட்டம் உள்ளது.

இந்நிலையில் இந்த வரம்பை நீக்குவதற்கான சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவுக்கு ஆதரவாக 2,958 வாக்குகளும் எதிராக 2 வாக்குகளும் பதிவாகியுள்ளது. மூன்று பேர் விடுப்பு எடுத்ததால் வாக்களிக்கவில்லை.

இதையடுத்து சி ஜின்பிங் தனது இரண்டாவது பதவிக்காலமான 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தனது வாழ்நாள் வரைக்கும் ஜனாதிபதியாக தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இது சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கும் என்று கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்