மனிதர்களுக்கே சவால் விடும் ரோபோ: புதிய சாதனை படைத்தது Boston Dynamics

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
109Shares
109Shares
lankasrimarket.com

Boston Dynamics என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய ரோபோ வடிவமைப்பு நிறுவனம் ஆகும்.

இந்த நிறுவனம் சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறைக்குரிய ரோபோ ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது.

மிருகத்தினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்த குறித்த ரோபோ பெரிதும் கவரக்கூடியதாக இருந்தது.

இந்நிலையில் தற்போது மனிதர்களுக்கு ஒப்பான ரோபோவினை வடிவமைத்துள்ளது.

இந்த ரோபோவானது சிறந்த சமநிலையைப் பேணக்கூடியதாகவும், பின்புறமாக கரணம் போடக்கூடியதாகவும் இருக்கின்றது.

150 கிலோ கிராம்கள் எடைகொண்ட குறித்த ரோபோவின் அபார செயற்பாட்டினை வீடியோவில் காண முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்