தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்த மைக்ரோசொப்ட்

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
0Shares
0Shares
lankasri.com

எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களே இந்த உலகை ஆளவுள்ளன.

இந்நிலையில் குறித்த தொழில்நுட்பம் படிப்படியாக மேம்படுத்தப்பட்டு வரப்படுகின்றது.

இது இப்படியிருக்கையில் மைக்ரோசொப்ட் நிறுவனம் ஹிந்தி, பெங்காலி மற்றும் தமிழ் ஆகியவற்றினை நிகழ்நேர முறைவழியாக்கத்தின் அடிப்படையில் மொழிபெயர்க்கக்கூடிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்கின்றது.

இந்தியா தனது 69வது குடியரசு தினத்தினை கொண்டாடும் வேளையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இத் தொழில்நுட்பத்தின் ஊடாக மிகவும் திருத்தமான முறையில் மொழிபெயர்ப்பு செய்யக்கூடியதாக இருப்பதுடன் ஒலியைப் பயன்படுத்தியும் மொழிபெயர்க்க முடியும்.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்