பாம்பினங்கள் பூமியிலிருந்து முற்றாக அழிந்துபோகும் அபாயம்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
0Shares
0Shares
lankasrimarket.com

பூமியின் உயிரின வரலாற்றில் பாம்புகளுக்கும் ஒரு நீங்காத இடமுண்டு.

எனினும் அவை விரைவில் பூமியிலிருந்து அழிந்துபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதாவது பாம்புகளின் உயிர்களைப் பறிக்கும் மரபணு பூஞ்சை நோய் பரவ ஆரம்பித்துள்ளது.

மிகவும் வேகமாக பரவும் இந்த நோய் அவற்றின் உயிரை காப்பாற்ற முடியாத அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

அமெரிக்காவில் இருந்து பாம்புகளில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த நோய் தற்போது ஐரோப்பிய நாடுகளிலும் வேகமாக பரவி வருகின்றது.

இதனால் பல வகை பாம்பினங்கள் ஏற்கணவே பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Ophidiomyces என அழைக்கப்படும் ஒரு வகை பக்டீரியாவினாலேயே இந்நோய்த் தாக்கம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்