சிறையில் இருந்து தப்பிய கொலை குற்றவாளி: பொலிசார் எச்சரிக்கை

Report Print Peterson Peterson in சுவிற்சர்லாந்து
0Shares
0Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் இருந்து கொலைக் குற்றவாளி ஒருவர் தப்பியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள ஃபிரிபோர்க் நகரில் கொசோவோ நாட்டை சேர்ந்த ஒருவர் வசித்து வந்துள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு நபர் ஒருவருடன் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மற்றொரு நபர் உதவியுடன் இருவரும் அவரை கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

இக்கொலை சம்பவத்தை தொடர்ந்து இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன் தினம் சிறையில் இருந்த இரண்டு கைதிகளில் ஒருவரான Bashkim L(33) என்பவர் தப்பியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

நபர் மிகவும் ஆபத்தானவர் எனவும், வெளிநாட்டு உதவியுடன் அவர் சுவிட்சர்லாந்து நாட்டை விட்டு தப்பியிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், நபரை பொதுமக்கள் கண்டுபிடித்தாலும் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும் பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்