பிரித்தானியாவில் முகாமிடும் ஏலியன்ஸ்: வெளியான அதிர்ச்சி வீடியோ

Report Print Basu in பிரித்தானியா
0Shares
0Shares
Cineulagam.com

பிரித்தானியா வானில் சிறிய ஏலியன்ஸ் விண்கலம், பெரிய விண்கலத்துடன் தொடர்புக் கொள்ளும் பரபரப்பு வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Isle of Wight, Lake பகுதியை சேர்ந்த 22 வயதான James Ward என்ற இளைஞரே குறித்து மர்ம வீடியோவை பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ குறித்து James Ward கூறியதாவது, கடந்த 2ம் திகதி வானில் இந்த நிகழ்வை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன்.

வானில் ஒரு சிறிய அடையாளம் தெரியாத பறக்கும் பொருளும், பெரிய பறக்கும் பொருளும் தொடர்பு கொண்டது. இதை நான் காரிலிருந்து வீடியோவாக பதிவு செய்தேன்.

இதன்போது என் கண்களை நம்ப முடியவில்லை, நான் என்ன என்று எனக்கு தெரியாது. இதுபோன்ற ஒரு நிகழ்வை என் வாழ்க்கையில் பார்த்தது கிடையாது.

அது விமானம் அல்லது ஹெலிகாப்டராக இருக்க வாய்ப்பில்லை. அது பறக்கும் தட்டாக தான் இருக்கும். இரண்டு தட்டுகளும் தொடர்புக்கொண்ட போது வானில் நீல நிற ஒளி தோன்றியது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments