ஆபாச இணையத்தளம் பார்க்க கட்டுப்பாடு: வருகிறது புதிய சட்டம்

Report Print Peterson Peterson in பிரித்தானியா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரித்தானிய நாட்டில் ஆபாச இணையத்தளங்களை பார்க்க கடுமையான கட்டுப்பாடு விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆபாச இணையத்தளங்களை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் பார்ப்பதால் குறைந்த வயதுடையவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிறது.

கடந்தாண்டு எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில் பிரித்தானியாவில் மட்டும் 15-16 வயதுடையவர்கள் 65 சதவிகிதமும், 11-16 வயதுடையவர்கள் 48 சதவிகிதமும் ஆபாச இணையத்தளங்களை பார்ப்பதாக தெரியவந்துள்ளது.

இதனை தடுப்பதற்காக ஆபாச இணையத்தளங்களை பார்ப்பவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருப்பதை இணையத்தளங்கள் உறுதி செய்ய வேண்டும் என்ற சட்டம் 2018-ம் ஆண்டு ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.

இதன் மூலம், ஆபாச இணையத்தளங்களை பார்ப்பதற்கு முன்னதாக ஒருவரின் கிரிடிட் கார்ட் தகவல்களை அளித்து, அவரது வயது உறுதி செய்யப்பட்ட பின்னரே இணையத்தளத்திற்குள் செல்லுமாறு புதிய விதிமுறை நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த விதிமுறையை அனைத்து ஆபாச இணையத்தளங்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிமுறையை மீறும் இணையத்தளங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுக் குறித்து பிரித்தானிய தகவல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சரான Matt Hancock அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் சீரழிக்கப்படுவதை தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இணையத்தள சுதந்திரத்தை அனுப்பவிக்கும் அதே நேரத்தில் ஆபாச இணையத்தளங்களை பார்க்க கடுமையாக கட்டுப்பாடு விதிப்பதில் சர்வதேச அளவில் பிரித்தானிய முன்னணி நாடாக இருக்கும்’ என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments