டயானா உயிரை பறித்த கார் ஏலத்தில் வர வாய்ப்பு: எழுந்துள்ள கடும் எதிர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா
361Shares
361Shares
lankasrimarket.com

டயானா விபத்தில் உயிரிழப்பதற்கு காரணமான கார் ஏலத்தில் விடப்படும் என்ற செய்திக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

பிரித்தானிய இளவரசி டயானா கடந்த 1997ல் நடந்த கார் விபத்தில் மரணமடைந்தார். டயானா பயணித்த கார் கடுமையான சேதம் அடைந்துள்ள நிலையில் அதன் உரிமையாளர் Jean-Francois Musa காரை அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகத்துக்கு கொடுக்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.

இது நடக்கும் பட்சத்தில் மக்கள் பார்வைக்கு கண்காட்சியில் வைக்கப்படும் குறித்த கார் ஏலத்தில் விடப்படவும் அதிக வாய்ப்புள்ளது. ஏலத்தில் £10 மில்லியன் அளவுக்கு விலை போகும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டயானாவின் முன்னாள் பாதுகாவலர் Ken Wharfe கூறுகையில், காரை கண்காட்சியில் வைத்தால் அது டயானாவின் குடும்பத்துக்கு எவ்வளவு வருத்தத்தை கொடுக்கும் என ஏன் யாரும் யோசிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரித்தானியாவின் H&H Classics ஏல நிறுவனத்தை சேர்ந்த John Markey கூறுகையில், இது ஒரு கொடுமையான செயலாகும்.

எல்லாவற்றுக்கும் விலை உள்ளது என்பது உண்மை தான். ஆனால் டயானா உயிரை பறித்த காரை எந்த ஏல நிறுவனமும் ஏலத்தில் விற்க தயாராக இருக்காது என நம்புவதாக கூறியுள்ளார்.

குறித்த காரை பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் அருங்காட்சியங்கள் வாங்க ஆர்வம் காட்டுவதாக தனக்கு தெரியவில்லை எனவும் John கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்